fbpx
Homeபிற செய்திகள்முன்னேற விழையும் மாவட்ட திட்ட பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் ஆய்வு

முன்னேற விழையும் மாவட்ட திட்ட பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட் டம், முன்னேற விழையும் மாவட்ட திட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளை திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடு தல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட் டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலாந்தரவை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைப் பூங்கா அமைத்தல் பணியினையும், ராமநாதபுரம் நகராட்சி, முத்தாலம்மன் கோவில் தெருவில் நவரத்னா மக ளிர் சுய உதவிக் குழு சார்பில் இயங்கி வரும் சிறுதானிய உணவுகள் தயாரிக்கும் கூடத்தையும், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டினம் அன்னை சத்யா நினைவு குழந்தைகள் மையத் தினையும், தேவிபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை மற்றும் சிகிச்சை முறையினையும், திருஉத்திரகோசமங்கையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் விதை சுத்திகரிப்பு நிலையத்தி னையும், சக்கரக் கோட்டை ஊராட்சியில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி நிலை யத்தினையும் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செய லாளர் விக்ரம் கபூர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)பிரவீன் குமார், கூடுதல் இயக்கு நர் ஊரகவளர்ச்சித்துறை வீரணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) சேக் அப்துல்லா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.நாக ராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் சுந்தரே சன், மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் ரகு வீரகணபதி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img