கேஎம்சிஹெச் மருத்துவமனையின் ஓர் அங்கமாக மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டு 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தற்போது இக்கல்லூரியின் 2021-2022 முதலாமாண்டு மாணவர்களுக்கு மருத்துவ சேவைத் துறையில் அவர்களை இணைத்து கொண்டதை குறிக்கும் வகையில் வொயிட் கோட் வழங்கும் விழா நேற்று (ஏப்.26) கேஎம்சிஹெச் கலையரங்கில் நடைபெற்றது.
மசானிக் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ராமசாமி மாணவர்களுக்கு வொயிட் கோட் அணிவித்து வாழ்த்தினார்.
மாணவர்கள் நன்கு பயின்று பயிற்சி பெற்று தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதலாமாண்டு மருத்துவ மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.



