fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் 240 பேர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை விளையாட்டு பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

இதில் கை, கால் மாற்றுத்திறனாளி களுக்கான 50, 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஆகிய போட்டிகள் நடந்தன. ஒற்றையர், இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் நடந்தன.

பார்வையற்றோரு க்கான 50, 100 மீட்டர் ஓட்டம், நின்றநிலை தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. கையுந்து பந்து போட்டியில் தலா 7 பேர் கொண்ட அணி பங்கேற்றது.

இதுதவிர, மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவில் 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. எறிபந்து போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 பேர் இடம் பெற்றனர்.

இது தவிர காது கேளாதோருக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img