fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நகர திமுக சார்பில் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார்.

இதில் சிறபபு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, நீர்மோர், பழங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் வேலுமணி, சீனிவாசன், பாலாஜி, மத்தின், புவனேஸ்வரி, மீனா நடராஜன், சுதா சந்தோஷ்குமார், தேன்மொழி மாதேஷ், ஜோதி, ஜெயக்குமார், பிர்தோஸ்கான், ஆசிப்அலி மற்றும் நிர்வாகிகள் கனல் சுப்பிரமணி, திருமலைசெல்வன், தளபதிகோபி, போண்டா ரியாஷ், சரவணன், ஷமி, பாசில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் ராசு வீதி, சேலம் சாலை, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img