fbpx
Homeபிற செய்திகள்காருண்யாவில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைகூட்டம் - டாக்டர் பால் தினகரன் நற்செய்தி

காருண்யாவில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைகூட்டம் – டாக்டர் பால் தினகரன் நற்செய்தி

கோவை பெதஸ்தா பிரார்த்தனை மையத்தில் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாத பிரார்த் தனைக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சா லையில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வ தேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகிறது.

சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் வரும் 10-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு காருண்யா நகரில், பெதஸ்தா பிரார்த்தனை மையம் எதிரில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் கலையரங்கில் நடைபெறுகிறது.

இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் ஆகியோர் அருளுரை வழங்கி, சிறப்பு பிரார்த் தனை செய்கிறார்கள்.

வாழ்வின் விசேஷித்த தேவைகளுக்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை களும் ஏறெடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம் பெறும். இக்கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு ஆயிரக்க ணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதி யாக மேட்டுப்பாளையம்-சிவரஞ்சனி தியேட்டர், மதுக்கரை-மரப்பாலம், சித்ரா-பஸ் நிறுத்தம், சர வணம்பட்டி-கஸ்தூரி சூப்பர் மார்க்கெட், பாப்பம்பட்டி-ஜங்ஷன், பொங்களூர்- கஸ்தூரி ஸ்கூல், தொட்டிபாளையம்-அரசுப்பள்ளி, பெதப்பம்பட்டி-பஸ் நிறுத்தம், கொடுவாய்-சக்தி விநாயகம் புதூர், பொன்னாவரம்-அரசு மருத்துவமனை, தொட்டித் துறை-பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து மதி யம் 12 மணிக்கு சிறப்பு பேருந்துகள் ஒழுங்கு செய் யப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத் தில் இருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல்வதற்கும் பேருந்து வசதிகள் அதிகாலையில் இருந்து இரவு வரை செய்யப்பட்டுள்ளன.

சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலைகள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற் குள் இடம் பெறும். காருண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உண்டு.
இதற்கான ஏற்பாடுக ளை ஸ்டீபன் பாபு செய்து வருகிறார்.

இத்தகவலை செய்தித் தொடர்பாளர் ஜெ.ஜெப சிங் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img