குழந்தைகள் உதவி எண் 1098 குறித்து விழிப்புணர்வை போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை போத்தனூர் பகுதி யில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் குழந்தைக ளின் உதவி எண் 1098 குறித்து ரயில்வே போலீ சார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
அப்போது பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டாலோ, ஒன்று அல்லது குழுவாக குழந்தைகள் சந்தேகத்திற்கு இடமாக ரெயில் பயணம் செய்வதைப் பார்த்தாலும், உடல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்தால் அவர்களுக்கு உதவிட இலவச தொலைபேசி எண் 1098ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தண்டவாளப் பாதையை கடப்பது பற்றியும், ஓடும் ரெயிலில் ஏறுவதும் இறங்குவதும் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதும் மற்றும் செல்போன் பேசிக் கொண்டு செல்வதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டது.
முன் பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் தின்பண்டங்கள் மற் றும் குளிர்பானங்கள் வாங்கி அருந்த கூடாது என்றும், ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து செல்லும் பெண்கள் தங்கள் நகைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
இதேபோன்று அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதின் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நடனத்தின் மூலம் மக்களிடம் மண்வள பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.



