fbpx
Homeபிற செய்திகள்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு வழங்க வி நிறுவனம் முடிவு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு வழங்க வி நிறுவனம் முடிவு

தொழில் மற்றும் வாழ்க்கை யில் வெற்றி பெறுவ தற்கு தக்க வேலை மற்றும் அந்த வேலையை சிறப்பாக செய்வ தற்கு அவசியமான சிறப்பான திறன் மேம்பாடு ஆகிய இரண்டும் முக்கியமான காரணிகளாகும்.

முதல் கட்டமாக வி (வோடபோன் ஐடியா) வேலை மற்றும் கல்வி, இந்தியாவில் உள்ள மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர் தளத்தை இலக்காக கொண்டு, இளைஞர்கள் தங்களுக்கேற்ற வேலையை தேடும் வாய்ப்புகளையும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை மேம்படுத்தும் வாய்ப்புகளையும், அரசு பணிக்கான தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு களையும் ஒரே தளத்தில் வழங் கும் வகையில் வி ஆஃப்-ல் வழங்குகிறது.

வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனத்தின் சிஎம்ஓ, அவ்னீஷ் கோஷ்லா கூறுகையில், “வியி-ன் பிராண்ட் வாக்குறுதியான, “நாளைக்காக ஒன்றிணைவோம்“, என்பதற்கு ஏற்ப, வாடிக்கையாளரின் அன்றாட வாழ்வில் உள்ள தேவைகளைப் பெறுவதில் இருக்கும் இடைவெளியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவு வதற்கு உத்வேகமளிக்கும் பங் களிப்பை வழங்க முடியும் என்று நம்புகிறோம். இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரை பார்க்கும் பொழுது, அவர்களின் முக்கிய லட்சியம் என்பது ஒரு நல்ல வேலையை பெறுவ தும், வேலை வாய்ப்புகள் அதிகமிருக்கும் வகையில் தங்களது திறனை வளர்த்து கொள்வதுமாகவே இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப் படையிலான திறன்கள் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் இவையிரண்டும் அதிகம் உச்சரிக்கப்படும் அம்சங்களாக உள்ளன. இந்த பிரிவைச் சேர்ந்த இளைஞர்களில் பெரும்பாலோனருக்கு, குறிப்பாக, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் இருந்து வருபவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பை பெறுவது என்பது ஒரு முதன்மையான தேர்வாக உள்ளது.

இந்த அம்சங்களின் அடிப்படையில், அப்னா, என்குரு, பரீக்ஷா ஆகியவற்றுடன் இணைந்து வி வேலை மற்றும் கல்வி திட்டத்தை நாங்கள் ப்ரத்யேகமாக வடிவ மைத்துள்ளோம்.

இந்த ஒருங்கி ணைக்கப்பட்ட தீர்வுகள் வி வாடிக்கையாளர்கள் இன்று நிலவும் போட்டிகளை சமாளித்து தங்களது முயற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவதுடன், அவர்களின் பணி தொடர்பான லட்சியங்களை பூர்த்தி செய்யவும், வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் உதவும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img