fbpx
Homeபிற செய்திகள்பூத் மாறி ஓட்டு போடச் சென்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

பூத் மாறி ஓட்டு போடச் சென்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர் தலுக்கான வாக்குப்ப திவு விறுவிறுப் பாக நடைபெற்று வருகி றது. வாக்குப்பதிவு தொடங்கி யது முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

பாஜக தேசிய மகளி ரணி தலைவியும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் வாக்கு அளிக்க வந்தார்.

ஆனால் இந்தப் பள்ளியில் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அருகே உள்ள சி எம் எஸ் பள் ளிக்கு சென்று வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

வானிதி சீனிவாசன் வாக்களித்த பின் செய்தியா ளர்களிடம் பேசுகையில், மாநகராட்சியில் வார்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நான் வாகக்களிக்க வந்த பள்ளியில் எனக்கு ஓட்டு இல்லை.

அதனால் வேறொரு பள்ளியில் வாக்களித்துள்ளேன். தேர் தல் சரியான செயல் பாட்டில் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் நியாயமாக நடை பெறுவதிலும் கவனம் செலுத்தவில்லை என்றார்.

இந்நிலையில் திருநெல் வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வது வார்டு பகுதியில் உள்ள 314 வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு எதிரே உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை.

இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க முடிய வில்லை என பொதுமக்கள் புகார் தெரி வித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img