கோவை மாநகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) சரவணன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உள்ளனர்.



