கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி நிர்வாகம் ம ற்றும் ஆபீசர் பிரேபரிங் அகாடமியும் இணைந்து, கே.பி.ஆர் .வளாகத்தில் தேசப்பற்றாளர் உமேஷ் கோபிநாத் ஜாதவ்-ஐ வர வேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் மு.அகிலா ஆதரவோடு நடைபெற்றது.
உமேஷ் கோபிநாத் ஜாதவ், இசைக் கலைஞர் மற்றும் தேசபக்தி ஆர்வலர். இவர் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் பிறந்தவர். 2004-ம் ஆண்டு பெங்களூரில் குடியேறினார்.
பார்மசியில் முதுகலைப் படிப்பை முடித்து, கல்லூரி பேராசிரியராகவும், பயிற்சி பெற்ற தாளவாத்தியக் கலைஞராக,பெங்களூரில் இசைப் பள்ளியையும் நடத் திவருகிறார்.
இவர் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள தியாகிகள் / வீழ்ந்த மாவீரர்களின் நினை விடங்களை பார்வையிட, இந்தியாவின் முதல் தேசபக்தி சாலைப் பய ணத்தை மேற்கொண்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் 1.15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 141 தியாகிகளின் குடும்பத்தைச் சந்தித்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் சமாதியில் உள்ள மணலை சேகரித்து அதன் மூலம் தேசத்தின் வரைபடத்தை உருவாக் கியுள்ளார்.
இவர் கோவை மாநக ருக்கு வந்திருப்பதை நினைவூட்டும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஈசன்(Traning Commander of Delta Squad), மேஜர் ராகுல் சித்தார்த் (இந்திய இராணுவம்), இந்திய விமானப்படை பிளையிங் ஆபீஸராக பணியாற்றும் ஜே.நிசாநந்தன் தாயார் டாக்டர் டி.ஜோதிமணி (AP/ PsychologyPSG CAS) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



