இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் ஹெல்த்கேர் தளமான மெடிபட்டி(MediBuddy), பழம்பெரும் நடிகரும் மெகா ஸ்டாருமான அமி தாப் பச்சனை தங்கள் அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக அறிவித்துள்ளது.
இந்த தளம் டிஜிட்டல் ஹெல்த்கேர் துறையில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. வீடியோ அழைப்பு, வீட்டிலேயே ஆய்வக சோதனைகள், வீடுகளுக்கே மருந்துகள் டெலிவரி, மனநல ஆதரவு மற்றும் பிற சுகாதார சேவைகள் மூலம் ஆன்லைனில் 24×7 நேரமும் சிறப்பு மருத்துவர் களுக்கான அணுகலை மெடிபட்டி வழங்குகிறது.
90,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 7000 மருத்துவமனைகள், 3000 நோயறிதல் மையங்கள், 2500 மருந்தகங்கள் மற்றும் – இந்தியாவில் 96% பின்-கோடு முகவரிகளை உள்ளடக்கிய பகுதிகளில் மெடிபட்டி, 3 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.
மெகாஸ்டாரின் பிரப லத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில், இந்த பிராண்ட் தன்னை வீட்டுப் பெயராக நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மெடிபட்டியின் இணை நிறுவனர் சிஇஓ சதீஷ் கண்ணன் கூறுகையில், ‘அமிதாப்பச்சனை அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராகக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகி றோம். அவருடன் இணைந் திருப்பது ஒரு முழுமையான மரியாதையை தருகிறது. அவருடைய பெயர் மட் டுமே நம்பகத்தன்மை, நம்பிக்கை, மரியாதை ஆகிய வற்றை கொண்டுள்ளது. பச்சன் சினிமாவுக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மெடிபட்டி இந்திய ஹெல்த்கேர் அமைப்பாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஒவ் வொரு இந்தியரையும் சென்றடைவது மற்றும் உயர்தர சுகாதார சேவையை அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதையே இலக்கை அடைவதற்கான ஒரு படியாக நாங்கள் பார்க்கி றோம்’ என்றார்.
இந்தியாவின் ஹெல்த்கேர் டிஜிட்டல் மயமாக்கலில் மெடிபட்டி எப்போதும் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் 7 லட்சம் தடுப்பூசிகளை தாண்டியுள்ளனர். அரசு வழிகாட்டு நெறிமுறைக ளின்படி குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகளை வழங்க தயாராகி வருகின்ற னர்.
தொற்றுநோய்களின் போது, மெடிபட்டி மருத்து வமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்கான கண் காணிப்பு போன்ற பல முயற்சிகளை அறிமுகப்ப டுத்தியது.



