கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள சென்ற அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லக் கூறினர்.
ஆனால் தான் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதை தடுக்க கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் ஏற்கனவே இரண்டு முறை வேலூர் இப்ராஹிம் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



