fbpx
Homeபிற செய்திகள்அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் சுயேட்சை வேட்பாளர் பஞ்சாப் தமிழர்

அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் சுயேட்சை வேட்பாளர் பஞ்சாப் தமிழர்

தமிழகத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு முன்னணி கட்சியின ருடன் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில் 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 71 வது வார்டு பகுதியான ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை உள்ளாட்சி தேர்தல் களத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்பவர் களமிறங்கி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவர் தனது பேட்டியில் கூறுகையில், பல்வேறு சமுதாய மக்களும் வசித்து வரும் ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதில் தாம் பெருமை படுவதாக கூறிய அவர்,உருவத்தில் தாம் பஞ்சாபியாக இருந்தாலும் தமிழன் என தம்மை பெருமையாக கூறினார்.

தொடர்ந்து அவர் 71 வது வார்டில் போட்டியிடும் தமக்கு பெட்ரோமாக்ஸ் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தம்மை கோவை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என உறுதியோடு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img