கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் என்றழைக்கப்படும் பெங்க ளூரு விமான நிலையம், இந்தியாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது.
விமானத் துறை வளர்ச்சியில் பெங்களூரு விமான நிலையம் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை வழங்கி வருகிறது. மெட்ரோ அல்லாத நகரங்களுடன் தொடர்ச்சியான இணைப்பையும் அங்கிருக்கும் மக்கள் விமானத்தில் செல்வதற் கான வாய்ப்பையும் உருவாக்கித் தருவதால், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கம ளித்து வருகிறது.
இந்த நடைமுறையில், பெங்களூரு விமான நிலையம், தென்னிந்தியா வின் அதிகம் விரும்பப்படும் டிரான்ஸ்பர் மையமாக உருவாகியுள்ளது.
உலகில் அதிகவேகமாக வளர்ந்துவரும் துறைகளில், இந்திய விமானத் துறை ஒன்று. 2013-&14-ம் ஆண்டில் 16.9 கோடிப் பயணிகளில் இருந்து 2019-20-ம் ஆண் டில் 34.1 கோடிப் பயணிகள் என இரட்டிப்பு மடங்கைவிட அதிக அளவை இந்திய விமானத் துறை எட்டியுள்ளது. ஆண்டுக்கு 10% வளர்ச்சி பெற்றுள்ளது.
2021-ம் ஆண்டில் பெங்களூரு விமான நிலையம் 74 உள்நாட்டு ஊர்களுடன் இணைப்பில் இருக்கிறது. கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் 54 உள்நாட்டு ஊர்களுடன் மட்டுமே இணைப்பில் இருந்தது.
இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து தொட்டுள்ள அதிகபட்ச ஊர்கள் 74 என்பது மட்டுமல்லாமல், தென்னிந்திய விமான நிலையங்களிலேயே இந்த இணைப்புதான் அதிகம்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பில் பெரும் பாலானவை மெட்ரோ அல்லாத நகரங்கள். இதன் விளைவாக, 2021-ம் ஆண்டில் மெட்ரோ அல்லாத பாதைகளில் விமானப் பயணம் 63% அதிகரித்துள்ளது.
பெங்களூரு விமான நிலையத்துக்கு அதிகளவில் டிரான்ஸ்பர் பயணிகளை அனுப்பும் முக்கிய விமான நிலையங்கள் சென்னை, கொச்சி, ஹைதராபாத், கோவா.
கர்நாடக மாநிலத்தின் வளர்ந்துவரும் பொருளாதாரம் ஆகியவற் றின் காரணமாக தென் னிந்தியா, மத்திய இந்தியா வின் முக்கிய வாசலாக பெங்களூரு உருவாக முடிந்துள்ளது.
75 நிமிட பறக்கும் எல்லைக்குள் பெங்களூரு விமான நிலையம் 23 நகரங்களை இணைக்கிறது. இந்த டிரான்ஸ்பர் பயணிகளின் வருகை, மற்ற உள் நாட்டு, சர்வதேசப் பாதைகளில் பயணிகளின் வருகையையும் பலப்படுத்தியுள்ளது.
இந்த விமான நிலையம் சுமார் 25.6 கோடி பேருக்கு சேவை செய்கிறது. இது இந்திய அளவில் ஐந்தில் ஒரு பங்கு.



