அமேசான் இன்று 2021-ம் ஆண்டிற்கான ஃபயர் டிவி ஸ்ட்ரீமிங் டிரெண்டுகளை வெளியிட்டது.
அதில் இந்தியாவில் அதன் ஃபயர் டிவி சாதனங்கள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.
ஃபயர் டிவி கியூப் மற்றும் ஃபயர் டிவி சாதனங்களைத் தயாரிக்கும் அமேசானின் முதல் உள்ளூர் தயாரிப்பு வரிசையின் தொடக்கத்துடன், 2021 நாட்டில் ஃபயர் டிவிக்கு ஒரு மைல்கல் ஆண்டாக அமைந்தது.
இந்தியா முழுவதும் 80% பின் குறியீடுகளில் ஃபயர் டிவி சாதனங்களை வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். ஹிசார், திருவள்ளூர், சித்தூர், ஆல்வார், இம்பால் மற்றும் தெற்கு அந்தமான் போன்ற சிறிய நகரங்களில் ஃபயர் டிவி சாதனங்களின் விற்பனை அதிகரித்தது. ஃபயர் டிவியில் உள்ள வன்பொருள் மற்றும் அம்ச மேம்பாடுகளை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு 4 வாடிக்கையாளர்களில் ஒருவர் ஃபயர் டிவி சாதனங்களின் புதிய, வேகமான பதிப்பிற்குச் சேர்க்கப்பட்டு அல்லது மேம்படுத்தப்பட்டுள்ளனர். ப்ரைம் டே மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது Amazon.in-™
-ல் மிகவும் பிரபலமான முதல் 10 தயாரிப்புகளில் Fire TV Stick இடம்பெற்றது.
35% வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஃபயர் டிவி சாதனங்களைப் பரிசளித்துள்ளனர் அல்லது பகிர்ந்துள்ளனர். ஃபயர் டிவி நுகர்வோர் மத்தியில் மிகவும் விரும்பப்படும் டிவி வகையாக நகைச்சுவை அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
ஃபயர் டிவி பயனர்கள் அலெக்சாவை நிமிடத்திற்கு ஒருமுறை “தாரக் மேத்தா காஊல் தாசாஷ்மாவை’’ பிளே செய்யும் படி கேட்டுக் கொண்டனர் .இது ஃபயர் டிவி சாதனங்களில் அதிகம் தேடப்பட்ட டிவி நிகழ்ச்சியாக அமைந்தது.
Peppa Pig, Doremon மற்றும் Cocomelon ஆகியவை ஃபயர் டிவி சாதனங்களில் மிகவும் பிரபலமான குழந்தைகள் நிகழ்ச்சிகளாகும். குறைந்த பட்சம் ஒரு பயனராவது ஒவ்வொரு நிமிடமும் இந்த நிகழ்ச்சிகளை அலெக்சாவிடம் கேட்பார்!.



