fbpx
Homeபிற செய்திகள்மீண்டும் நீட் விலக்கு மசோதாநிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு: 8ம் தேதி...

மீண்டும் நீட் விலக்கு மசோதாநிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு: 8ம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்

நீட் விலக்கு மசோ தாவை ஆளுநர் திருப்பிஅனுப்பிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டப் பேரவை அனைத் துக் கட்சித் தலை வர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சட டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என்று ஒரும னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டுமுதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறை« வற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து, கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர் தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல் கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன் படி, திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்பு தலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இதுகுறித்து வலி யுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து, நீட் தேர்வு குறித்த மனுவை அளித்தது. அதற்குப் பிறகும், நீட் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பிப்.1ம் தேதி,நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரி சீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலி யுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய கவர்னருக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. வரும் 9ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்த்தப்பட்டது.

நீட் விலக்கு மசோ தாவை மீண்டும் நிறை« வற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என்றும் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக வலி யுறுத்தியது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் கூறுகையில்,நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மே லும், நீட் விலக்குக் காக நிறைவேற்றப்பட்ட மசோதா ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் புரிந்துள்ள நிலையில், ஆளுநருக்கும், பாஜக மாநில தலைவர் அண் ணாமலைக்கும் புரியாமல் போனது விந்தையாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img