கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் காக மாநகராட்சி, நகராட்சிகள, பேரூராட்சிகளில் 17 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், கோவை மாநகராட்சி, 7 நகராட் சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
மறுபுறம் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி, நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு 17 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்கள் மாநகராட்சி: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் சேர்த்து தடாகம் சாலையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள்: மேட்டுப்பா¬ ளயம் – நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி – நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, வால்பாறை – அரசு கலை அறிவியல் கல்லூரி, காரமடை – மெட்ரோ மெட்ரிக்குலேஷன் பள்ளி குட்டையூர், கூடலூர் -ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரி, பெ.நா.பாளையம், கருமத்தம்பட்டி – புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், மதுக்கரை – ஸ்ரீ நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லூரி.
பேரூராட்சிகள்: மோப்பிரி பாளையம், சிறுமுகை, அன்னூர் – அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை, ஜமீன் ஊத்துக்குளி, வேட்டைக் காரன்புதூர், ஒடையகுளம் – வி.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெ.நா.பாளையம், நெ.4.வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் – பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஜோதிபுரம், கோட்டூர், சூளேஸ்வ ரன்பட்டி, சமத்தூர் & அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மலையாண்டிப்பட்டிணம்.
ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம், வெள்ளலூர், கிணத்துக்கடவு, பெரிய நெகமம், எட்டிமடை, திருமலையாம்பாளையம் – அரசு மேல்நிலைப்பள்ளி, பிரிமீயர் மில்ஸ், எஸ்.எஸ்.குளம், இடிகரை – இன்ஃபோ பொறியியல் கல்லூரி, கோயில்பாளையம், தாளியூர், தொண்டாமுத்தூர், வேடபட்டி, பேரூர் – ஸ்ரீ மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தென்கரை &அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலாந்துறை, சூலூர், இருகூர், கண்ணாம்பாளையம், பள்ளபாளையம் – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சூலூர்.



