நாளை மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 75-ஆவது நினைவு நாளானது தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாகத் தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந் துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை (30.1.2022) காலை 10 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.
ஆண்டுகள் 75 மறைந்தாலும், அண்ணலின் அறவழியும்; அகிம்சை வழிக் கோட்பாடுகளும் இன்றல்ல; என்றென்றும் மங்கிடாமல் போற்றிப்
புகழப்படும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.



