fbpx
Homeபிற செய்திகள்கோவில்பாளையம் காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

கோவில்பாளையம் காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

கோவை அருகே கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு சுமார் ஏழு மணிக்கு திடீரென வருகை புரிந்த தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமாரிடம் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு காவலர்கள் எத்தனை பேர்? இன்று பணிக்கு எத்தனை பேர் வந்துள்ளார்கள்? என்பதனை கேட்டறிந்த டிஜிபி சைலேந்திரபாபு பொது நாட்குறிப்பு குற்ற வழக்குகளின் நிலை போன்றவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் கைதிகளின் அறை, காவல் நிலையம் முழுவதும் பார்வையிட்டு காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமாரிடம் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் அங்குள்ள காவலர்களிடம் பணி நேரத்தில் உள்ள நிறை குறைகளையும் கேட்டறிந்த டிஜிபி, காவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சத்தியமங்கலம் புறப்பட்டு சென்றார் .

தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு முன்னறிவிப்பின்றி திடீரென கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது அங்கு பணியிலிருந்த காவல்துறையினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஒருவித பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

படிக்க வேண்டும்

spot_img