இந்தியாவின் மிகப் பெரிய வாகன கடன் வழங்கும் நிறுவனமான ஸ்ரீ ராம் டிரான்ஸ்ஃபோர்ட் ஃபைனான்ஸ் லிட், வங்கி சேவை கிடைக்காத பிரிவில் பல்வகைப்பட்ட சேவைகளை வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிட் மற்றும் அதன் புரமோட்டர் நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிட்டல் லிட் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் குழுகூட்டத்தில், நிறுவனங்களை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த இணைப்பு குறித்து ஸ்ரீராம் கேப் பிட்டல் நிறுவனத்தின் நிர் வாக இயக்குநர் டிவி ரவி கூறுகையில், ‘எந்த வித மூலதன செலவினத்தையும் அதிகரிக்காமல், இந்த இணைப்பு அனைத்து வணிகத் துறைகளிலும் எங்கள் விநியோக செயல் பாடுகளை மேம்படுத்தும்.
ஒருங்கிணைப்பால் ஏற்படும் நன்மைகள் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சியால் ஏற் படும் பலன்கள் மகத்தானவையாக இருக்கும்’ என்றார்.
பிஇஎல் நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் கூறுகையில், ‘ஸ்ரீராமின் இரண்டு கடன் நிறு வனங்களும் ஒன்றாக இ¬ ணவதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகி றேன். அவை மிகப் பெரிய சில்லறை நிதி நிறுவனமான என்பிஎப்சி ஆக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், ஒருங்கிணைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மகத்தான வாய்ப்புகளையும் அவர்களுக்கு அது வழங்குகிறது’ என்றார்.
ஸ்ரீராம் டிரான்ஸ் போர்ட் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் உமேஷ் ரேவங்கர் கூறுகையில், ‘சந்தேகத்துக்கு இடமின்றி ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் இந்தியாவின் கிராமப்புறங்களில் நிதி சேவைகளுக்கான சந்தை தலைமையாக நிச்சயம் திகழும்.
ஸ்ரீராம் குழுமம் எங்களின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை எப்போதும் கடன் கிடைக்காமல் தவித்து வரும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எங்கள் வாடிக்கையாளர் களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரே குடையின் கீழ் தீர்வுகளை எளிதாக்குவதற்கும் வழங்குவதற்கும் இந்த இணைப்பு மற்றொரு படியாக விளங்கும். என்பிஎப்சி துறையில் முதன்மையாக விளங்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பை கொண்டு வருகிறது’ என் றார்.



