முன்னாள் அமைச் சர் தங்கமணிக்கு சொந்த மான இடங்களில் 4 மணி நேரமாக லஞ்ச ஒழிப் புத் துறை சோதனை தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2 முக்கிய துறைகளாக கருதப்பட்ட மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி.
அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக 4.85 கோடி ரூபாய் அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணியிலிருந்து தங்கமணியின் மகன் மற்றும் மனைவியின் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதோடு, வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு உட்பட 9 மாவட்டங்கள் மட்டு மல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தலா 2 இடங்களில் என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடக்கிறது.
இதில் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடக்கிறது.
சேலம் மாநகரில் நெடுஞ்சாலை நகர் பகுதியிலுள்ள ராஜாபுரம் பகுதியில் தங்கமணியின் மகன் தரணீதரனின் மாமனார் வீடு உள்ளது.
இங்கு தான் தரணீதரன் வசித்து வருகிறார். இங்கு காலை 6.30 மணியிலிருந்து சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் சேலம் மாவட்ட துணை கண்காணிப்பாளராக உள்ள கிருஷ்ணராஜ் தலைமையில் 7 போலீசார் இந்த வீட்டில் காலை முதலே சோதனை நடத்திக் கொண்டுள்ளனர். சுமார் 4 மணி நேரமாக இந்த சோதனையானது நீடித்து வருகிறது.
தங்கமணியின் நெருங்கிய நண்பரும் நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்ததாரராக இருந்த குழந்தைவேலு என்பவர் சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் அஸ்வா பார்க் என்ற நட்சத்திர ஓட்டலை கட்டியுள்ளார்.
அங்கும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. குழந்தைவேல் நரஜோதிப்பட்டி என்ற இடத்தில் வசித்து வருகிறார். அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.
குழந்தைவேலின் மகன் மணிகண்டன் வீடு மரவ னேரி பகுதியில் உள்ளது. அங்கும் சோதனை என மொத்தம் 4 இடங்களில் இன்று காலையில் இருந்து 4 மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மட்டுமில்லாமல் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புபோலீசார் என சுமார் 20 பேர் இந்த 4 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று காலை முதல் சோதனை நடைபெறுவதன் காரணமாக பல்வேறு ஆவ ணங்கள் கிடைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கோவையிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நடத்திவரும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான இன்ட்வேர் என்ற டைல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெயஸ்ரீ பிளைவுட்ஸ் ஆகியவை செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்த இடத்தில் 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த இடம் காலி செய்யப்பட்டதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் திரும்பிச் சென்றனர்.
ஈரோட்டில் ஈரோடு குமலன் குட்டை கணபதி நகர் பகுதியில் உள்ள தங்கமணியின் உறவினர் வீடு, தங்கமணிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட் டத்தில் 11 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
ஈரோடு சூளை அரு கேயுள்ள முனியப்பன் கோயில் வீதியில் சிவானந் தம் என்பவருடைய வீட்டிலும், பண்ணை நகரிலுள்ள செந்தில்நாதன் என்பவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஈரோடு குமலன் குட்டை, கணபதி நகர் பகுதியில் தங்கமணியின் உறவினரான சின்ன துரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண் டுள்ளனர்.
சென்னையில் போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், 5 துப்பாக்கி ஏந்திய போலீசார் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு குவியும் அதிமுகவினரை கட்டுப்படுத்த போலீசார் பேரிகார்டு அமைத்து வருகின்றனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்காக போடப்பட்ட தடுப்பு பேரி கார்டுகளை அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



