கிறிஸ்துமஸ் கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ் துநாதர் ஆலயத்தில் ஞாயிறு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் கிறிஸ்து வரலாற்றை ஆடல் பாடல்களுடன் தத்ரூபமாக நாடக வடி வில் நடித்து காண்பித்தனர். கிறிஸ்துமஸ் மாதம் என்றாலே தினமும் கிறிஸ்தவ ஆலயங்களில், கிறிஸ்துவின் பிறப்பை குறித்தான பாடல் நிகழ்ச்சி, நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக காந்தி புரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஞாயிறு பள்ளி மாணவ மாணவிகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாணவ மாணவிகளின் சிறப்பு பாடல்கள், சிறு குழந்தைகளின் வேதாகம வச னங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல், கிறிஸ்துவின் பிறப்பை கண்ணுக்கு முன் கொண்டு வந்த நாடகங்கள், மாணவ மாணவிகளின் உற்சாக நடனங்கள் என்று அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி மாணவ , மாணவிகள் தத்ரூபமாக நடித்தும் பாடியும் காண்பித்தனர்.
காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் தலைமை போதகர் ஆயர் டேவிட் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்ற இதில், உதவி ஆயர் பாபி ஆல்பிரட் ஜோசப், செயலாளர் ஜெயச் சந்திரன், பொருளாளர் தேவராஜ் சாமுவேல், ஞாயிறு பள்ளி கன்வீனர் அகஸ்டா பீட்டர் மற்றும் போதகர் சேகர உறுப்பினர்கள், திருமண்டல பேரவை உறுப்பினர்கள், ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.



