fbpx
Homeபிற செய்திகள்ஊரடங்கில் இரட்டிப்பானது டிஜிட்டல் இணைப்பு தொலைதூர வேலை, கல்வியை ஈர்க்கவில்லை லிர்னே ஆசியா நிறுவன ஆய்வில்...

ஊரடங்கில் இரட்டிப்பானது டிஜிட்டல் இணைப்பு தொலைதூர வேலை, கல்வியை ஈர்க்கவில்லை லிர்னே ஆசியா நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் உள்ள 7000 குடும்பங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப் பின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் இணையப் பயன்பாடு இருமடங்காக அதிகரித்துள்ளதாக, லிர்னே ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிர்னே ஆசியா, பொருளாதார கொள்கை சிந்தனைக் குழுவான சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICRIER) இணைந்தது. கடந்த 12-ம் தேதி நடத்தப்பட்ட மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் முன்னணி அரசு, தனியார் துறை, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குழுவில், டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர் ஜெய்ஜித் பட்டாச்சார்யா, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக தேசிய மின் ஆளுமைப் பிரிவுத் தலைவர் அபிஷேக் சிங், தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளின் இயக்குநர், நிஷாந்த் பாகேல், லிர்னே ஆசியா தலைமை செயல் அதிகாரி ஹெலானி கல்பயா ஆகியோர் அடங்குவர்.

ஹெலானி கல்பயா கூறியதாவது: பணியிடங்கள் வேலை செய்வதற்கான நவீன, கலப்பின வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2020-ம் ஆண்டு முதல் ஊரடங்கின்போது சில பள்ளிகள் மட்டுமே தொலைதூர கற்பித்தலுக்குத் தயாராக இருந்தன.

தினசரி அடிப்படை கற்பித்தலில் டிஜிட்டல் தொழில்நுட்பம் இணைக் கப்படாவிட்டால், ஊர டங்கு அல்லது பிற நெருக்கடி சூழ்நிலை யின்போது திடீரென டிஜிட்டல் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தத் தொடங்குவது கடினம் என்றார்.

சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த வருகைப் பேராசிரி யரான முனைவர் ரஜத் கத்தூரியா கூறுகையில், அதிகரித்த டிஜிட்டல் மயமாக்கலின் நன்மைகள் புவியியல் மற்றும் மக்கள்தொகை முழுவதும் சமமாக பரவியுள்ளன என்பது ஒரு நேர்மறையான விஷயமாகும். குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும் இதில் சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் மயமாக்கல் பயணம், ஃபைபர் இடுவதையும், மலிவான ஸ்மார்ட்போன்களை வழங்குவதையும் தாண்டி அணுகலைப் பற்றிய விரிவான புரிதலை அளிக்க வேண்டும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img