fbpx
Homeபிற செய்திகள்விஜிஎம் அறக்கட்டளை, பாலக்காடு தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மையம் நடத்தும் சொற்பொழிவுத் தொடர் இணையத்தில் நாளை தொடக்கம்

விஜிஎம் அறக்கட்டளை, பாலக்காடு தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மையம் நடத்தும் சொற்பொழிவுத் தொடர் இணையத்தில் நாளை தொடக்கம்

சமூக நலச்சிந்தனைகள் எனும் பொருண்மையில் கோவை வி.ஜி.எம்.அறக் கட்டளையும், பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் சொற்பொழிவுத் தொடரின் தொடக்க விழாவும், முதல் சொற் பொழிவும் நாளை (நவ.21) காலை 10.30 மணிக்கு இணையத்தில் நடைபெறுகிறது.

சென்னை தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் தொடக்கவுரை யாற்றுகிறார்.
கோவை பாரதீய வித்யா பவன் தலை வர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகிக்கிறார்.

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் வி.ஜி.மோகன்பிரசாத் முதல் சொற்பொழிவை நிகழ்த்த உள்ளார். கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமை யாளர் எம்.கிருஷ்ணன், கோவை மருத்துவர் ஜி.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

பாலக்காடு தமிழ்ப்பண் பாட்டு மைய இயக்குநர் போராசிரியர் முனைவர் கு.அ.ராஜாராம் அறிமுக உரையாற்ற உள்ளார். மருத்துவர் சுமன் வரவேற்கிறார். மருத்துவர் மதுரா பிரசாத் சுமன் நன்றி கூறுகிறார்.

மருத்துவர்கள் மித்ரா பிரசாத், வம்சி மூர்த்தி ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்க உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img