கோவை மாநகராட்சியில், பொதுக்கழிப்பிடத்தை சரியாக பராமரிக்காத இளநிலை பொறியா ளருக்கு ‘மெமோ’ வழங்க, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி, 10வது வார்டு, கருணாநிதி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அப்பகுதியில் நேரில் ஆய்வு நடத்தினார். மோட்டார் பழுதாகி, தண்ணீ ரின்றி, பராமரிப்பு இல்லாமல் இருந்த பொதுக்கழிப்பிடத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் பராமரிப்பு செலவுக்கு எப்படி ‘பில்’ எழுதப்படுகிறது என மாநகராட்சி பொறியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இப்பிரச்சினை யில், மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஹரி என்பவருக்கு ‘மெமோ’ வழங்க உத்தரவிட்டார்.



