fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோர்களின் தலையாய கடமை திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார் வலியுறுத்தல்

குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோர்களின் தலையாய கடமை திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார் வலியுறுத்தல்

குழந்தைகள் தினவிழாவை யொட்டி பொள்ளாச்சி P.K.D மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற் றும் குழந்தைத்தொழிலாளர் விழிப் புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இதற்கு பள்ளி முதல்வர் எம்.குமார் தலைமை தாங்கினார்.

பள்ளி ஆசிரியர் சர்மிளா பர்வீன் வரவேற்றார். கருத்தரங்கில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளுக்கான 37 வகையான உரிமைகளை பிரகடனம் செய்து அமல்படுத்தி வருகிறது.

வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரி மை, பராமரிப்பிற்கான உரிமை என வகைப்படுத்தி உள்ளது. குழந்தைகள் அவர்களுக்கான உரிமைகளை முழுவதுமாக அறிந்து கொள்வதோடு அறிமுகம் இல்லாதவர்களின் தொடர்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தாய் தந்தையர்களை விட சிறந்த நண்பர்கள் இருக்கமுடியாது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதோடு அன்றாட நிகழ்வு களை கலந்துரையாடல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

பெற்றோர்களும் அதற்கான நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் செல விடவேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு வரும் போதும் பயணநேரங்களின் போ தும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஆபத்து நேரும் என உணரும் பட்சத்தில் அருகில் உள்ளவர்களை சத்தமிட்டு உதவிக்கு அழைக்கவும் தயக்கம் கூடாது. உழைக்கும் சிறார்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற் றும் பாதுகாப்பிற்கு தமிழக அரசு பல்« வறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதுபற்றி மாணவ, மாணவிகள் விழிப் புணர்வு ஏற்படுத்துவதோடு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து 0422-2305445 என்ற தொலைபேசி எண்ணிற்கோ 1098 கட்டணமில்லா எண்ணிலும் www.Pencil. gov.in என்ற வலைதளத்திலும் புகார் பதிவு செய்யலாம்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பெற்றோர்களின் தலையாய கட மையாககொண்டு செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர் ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு வினி யோகம் செய்யப்பட்டது. நிறைவாக பள்ளி துணை முதல்வர் விக்டோரியா சாந்தி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img