fbpx
Homeபிற செய்திகள்காட்டு யானை தந்தத்தால் குத்துப்பட்டவரை காப்பாற்றிய கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள்

காட்டு யானை தந்தத்தால் குத்துப்பட்டவரை காப்பாற்றிய கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள்

தந்தத்தால் காட்டு யானை குத்தியதில் காயமடைந்தவரை, கே.எம்.சி.ஹெச்.-ல் மருத்துவர்கள் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்தனர். பழநி அருகே காட்டு யானை தந்தத்தால் குத்தியதில், பெருங்குடல் வெளியே வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் வாலிபர்.

கே.எம்.சி.ஹெச்.-ல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வந்தவரை தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ்குமார் பரிசோதித்தனர்.
சிடி ஸ்கேன் செய்ததில், யானையின் தந்தம் குத்தியதில், மார்பு பகுதியும் வயிற்று பகுதியும் பிரிக்கும் தோலின் நடுவே ஆழமாக காயம் ஏற்பட்டிருந்தது.

மார்பு எலும்பு, பின் பகுதியில் இடதுபுறம் உள்ள எலும்புகளும் உடைந்திருந்தன. பெருங்குடல் பகு தியானது, மார்புக்குள் சென்று இதயத்தையும் நுரையீரலையும் அழுத்தியிருந்ததோடு, வயிற்றுக்கு வெளி பகுதியில் வந்திருந்தது.

அவரது வயிற்று பகுதி திறக்கப்பட்டு, மார்புக்குள் சென்றிருந்த சிறு, பெருங்குடல், கல்லீரல் போன்றவை மீண்டும் வயிற்றுப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. கிழிக்கப்பட்டிருந்த உடலின் உள்பகுதி, மேல்பகுதி சதைகள் சரிப் படுத்தப்பட்டு, மார்பு பகுதிக்கு குடல் செல்லாமல் தடுக்கப்பட்டது. இது நுரையீரலை மீண்டும் விரிவடையச் செய்தது.

அவரது மார்பு பகுதியில் ஏற்பட்ட காயமும் சுத்தம் செய்யப்பட்டு, சிகிச்சை செய்யப் பட்டது. சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
தற்போது அவர் முற்றிலும் குண மடைந்து, வீடு திரும்பியுள்ளார்.

யானை தந்தத்தால் குத்தி உயிர் பிழைப்போர் மிகவும் குறைவே. இந்த நோயாளி அதிர்ஷ்டவசமாக கோவை மெடிக்கல் சென்டர் மருத் துவமனைக்கு வந்து சேர்ந்ததோடு, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு இவரை காப்பாற்ற முடிந்தது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லபழனிசாமி கூறுகையில், உயிருக்கு போராடிய நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன்.

மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதால் தான் இம்மாதிரியான சிக்கலான சவாலான சிகிச்சை முறைகளை மேற் கொள்ள முடிகிறது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img