fbpx
Homeபிற செய்திகள்தோட்டத் தொழிலதிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தோட்டத் தொழிலதிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. இதில் 2021-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிட். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (தோட்டங்கள்) அருண்குமார் தலைவராகவும், குன்னூர் மதேசன் பொசான்குட் என்டர் பிரைசஸ் (பி) லிட். நிறுவனத்தின் முதுநிலை பொதுமேலாளர் டி.ஜே.வர்கீஸ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சி.ஸ்ரீதரன், அஸ்கர் ஹூசைன், பி.பி. அச்சையா, என்.எஸ்.வினோத் குமார், டி.ஜி.பி.பின்டோ, சந்தீப் சிங் சித்து, அனில் மேத்யூ, பி.அம்பலத்தரசு, எம்.ஜி.திம் மய்யா, கே.எஸ்.நஞ்சப்பா, எஸ்.ராமச்சந்திரன், பி.எம்.ராகேஷ், வினோதன் கந்தையா, ஷகீர் நாகராஜன், ஜோ ஆண்டனி, கே.என்.வி.ரமணி, டி.ஜெயராம், பிரஷாந்த் பான்சாலி, கே.ஜே.மகேஷ் நாயர் ஆகியோர் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img