fbpx
Homeபிற செய்திகள்மழை பாதித்த உக்கடம் பகுதியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆய்வு

மழை பாதித்த உக்கடம் பகுதியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆய்வு

கோவை நகர் பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம், காந்திபுரம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இந்நிலையில் உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள டோபி கானா பகுதியில் மழை நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளை தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img