தொடர் மழையின் காரணமாக சேலம் மாவட்டம், ஏற்காடு, குப்பனூர் சாலையில் மண்சரிவால் மரங்கள், பாறைகள் மற்றும் சிறு கற்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
உடன் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



