fbpx
Homeபிற செய்திகள்நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிக்கு லேப்டாப் அமைச்சர் கயல்விழி வழங்கினார்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிக்கு லேப்டாப் அமைச்சர் கயல்விழி வழங்கினார்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவையை சேர்ந்த பழங்குடியின மாணவி சங்கீதாவுக்கு லேப்டாம் வழங்கியுள்ளதாகவும், மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சங் கீதா என்ற மாணவி நீட் தேர்வில் 202கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு பழங்குடியின கிராமத்தில் தவித்து வந்த இந்த மாணவி குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து இந்த கிராமத்திற்கு அடிப் படை வசதிகளை அரசு செய்து கொடுத்தது.

மேலும், தன்னார் வலர்கள் சிலரும் மாண விக்கு உதவ முன்வந்தனர். இந்த நிலை யில், மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் பழங்குடியினர் கிராமத்தில் முதல் முறை யாக மாணவி ஒருவர் மருத்துவ படிப்பை படிக்கச் செல்வது ஊர் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், சங்கீதாவுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தது.
இந்த நிலையில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று மாண வியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவிக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார் .

இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த பகு திக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து இப் பகுதி மக்களிடம் கேட்டறிந்துள்ளேன்.

மற்ற பழங்குடி மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் மாணவி சங்கீதா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி மாணவியை சந்துக்க வந்துள்ளேன். மாணவிக்கு கல்வி உதவிக்காக லேப் டாப் வாங்கி கொடுத்துள்ளோம்.

இந்த பகுதியில் மின்சாரம் இல்லாதை தெரிந்துகொண்டேன். உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்..
பழங்குடி மாணவர்களுக்கு எளிதில் சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவிக்கு தேவையான உதவிகளை அந்தந்த துறை சார்ந்து ,தனிப்பட்ட முறை யில் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளோம்.. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img