fbpx
Homeபிற செய்திகள்வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து: பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் வரவேற்பு

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து: பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் வரவேற்பு

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி மற்றும் நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, திருஞானசம்பந்தம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி கூறியதாவது: வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்த நிலையில் நீதி மன்றம் பேராணை வழங்கியுள்ளது.

பிற்படுத்தபட்டோருக்கான ஆணையத்தில் சில சமூகத்தினர் மட்டுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். கடந்த முறை அதிமுக அரசு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தேர்தலுக்காக வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில் அறிவித்தது.

பிற்படுத்தபட்டோர் சமூகத்தில் ஒரு அரசு உத்தியோகம் கூட பெறாமல் 28 சமூகங்கள் இன்றளவும் உள்ளன. மேலும் கடந்த அரசு கொண்டு வந்த இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

மேலும் எந்த வித புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5 சத வீதம் கொடுத்தது நியாமற்றது. இந்த பேராணையை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்டரீதியாக எதிர்த்து போராடுவோம்.

தமிழகத்தில் 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கிறது.
அந்த வேலைவாய்ப்புகள் பறிபோகாமல் இந்த தீர்ப்பு தடுத்து இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img