fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி மெக்கன்ஸ் கட்டிடக்கலை கல்லூரி 8வது பட்டமளிப்பு விழா

ஊட்டி மெக்கன்ஸ் கட்டிடக்கலை கல்லூரி 8வது பட்டமளிப்பு விழா

ஊட்டி மெக்கன்ஸ் கட்டிடக் கலைக் கல்லூரியின் 2019 – 2020 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கான எட்டாவது ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த 1ம் தேதி காலை 10 மணி அளவில் ஊட்டி HADP வளாகத்தில் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியும் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சரின் அங்கீகாரமும் பெற்ற மெக்கன்ஸ் கட்டிடக்கலைக் கல்லூரியில் பயின்ற 88 மாணவர்களுக்கு, விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் கல்வித்தலைவர் ஜி.செல்வகுமார், வரவேற்புரை ஆற்றி சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கி. வீரமணியும் கௌரவ விருந்தினராக பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.கிருஷ்ணசாமியும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கல்லூரியின் தலைவர் என்.முரளிக்குமரன் நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, முதல்வர் பேராசிரியர் என்.எஸ்.சரவணன் கடந்த கல்வியாண்டின் அறிக்கையை வெளியிட்டார்.

இறுதி ஆண்டு ஆய்வுக்கட்டு ரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 படைப்புகளுக்கு ஜே&ஸ் எண்டோவ்மென்ட் நிதியின் சார் பாகக் காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச் சியில் உரையாற்றிய கி.வீரமணி, மாணவர்களின் எதிர் காலம் சிறப்புற அறிவுரைகள் வழங்கிப் பட்டம் பெற்ற மாணவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழில் துறை வல்லுநர்களின் குழு விவாதம் நடந்தது. மாணவர்களின் துறை சார்ந்த கேள் விகளுக்கு வல்லு நர்கள் பதிலளித்தனர்.

விழாவில் எஸ்.சாலைக் குமரன் (சிஈஓ, இன்லேண்ட் குரூப்), எம்.மெய்யப்பன் (நிறுவனர், செட்டி நாடு டிசைன்ஸ்), ராஜேஷ்பாபு (நிறுவனர், அஸெட் அட்வைஸ்), எஸ்.ராமசாமி (-துணை நிறுவனர் அஸெட் அட்வைஸ்), எஸ் .செந்தில் குமார் (நிர்வாக இயக்குனர், கங்கா பவுண்டேஷன் பிரைவேட் லிமி டெட்) ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் துறைத்தலைவர் எஸ்.கே.சரண்யா நிறைவுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img