fbpx
Homeபிற செய்திகள்தடுப்பூசி போட விழிப்புணர்வு பிரச்சாரம்: சுந்தரம் பைனான்ஸ் ரூ.10 கோடி செலவழிக்க திட்டம்

தடுப்பூசி போட விழிப்புணர்வு பிரச்சாரம்: சுந்தரம் பைனான்ஸ் ரூ.10 கோடி செலவழிக்க திட்டம்

தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், பெரிய பொது சேவை திட்டமான ‘ஊசிங்கோ’ என்னும் திட் டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக ரூ.10 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஹர்ஷா விஜி கூறியதாவது: தமிழகத்தின் சிறுபான்மை குடிமக்களில் பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களுக்காக தடுப்பூசியை தவிர்க்கிறார்கள் என்று ஆய்வுகள் மற்றும் நிகழ்வு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் கடைசி கட்டத்தில்நாம் இருக்கிறோம். தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம், அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருப் பதோடு, 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைய உதவும் என்றார்.

தடுப்பூசி விழிப்புணர்வின் ஒரு பகுதியாக மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு புகழ்பெற்ற இசை அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் அறிவரசு கலைநேசன் எழுதியுள்ளார். அனிருத், அறிவு ஆகியோர் பாடி உள்ளனர்.

இந்த வீடியோவை இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடன இயக்குனர் சதீஷ் கிருஷ் ணன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா ஆகியோரும் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

இதில் ரோபோ சங்கர், பிஜே பாலா, தங்கதுரை, தீபா சங்கர் நடித்துள்ளனர். வீடியோவை லீttஜீs://ஹ்ஷீutu.தீமீ/3நீக்ஷ்1ணீதிவீக்ஷீஸீஞீநீ. -ல் பார்க்கலாம்.

சுந்தரம் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜிவ் லோச்சன் கூறியதாவது: முதல் டோஸ் போடுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதால், அதை இருமடங்காக உயர்த்துவதற்கும், தடுப்பூசி போடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கும் இதுவே சரியான நேரம். ‘ஊசிங் கோ’ என்னும் எங்களின் இந்த இசை வீடியோ, தடுப்பூசி போடுவதற்கு சிந்திக்க வைக்கும் வழியாகும் என்றார்.

பாரம்பரிய ஊடகங்கள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் அதன் சொந்த மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பொதுச் சேவை திட்டத்திற்காக சுந்தரம் பைனான்ஸ் குழுமம் ரூ.10 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img