தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததையொட்டி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் குத்துவிளக்கேற்றி, இனிப்பு வழங்கினார்.
உடன் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் பாஸ்கரன், கல்லூரி முதல்வர் பனிதாசன் உட்பட பலர் உள்ளனர்.



