இந்தியாவை அதிகாரம் படைத்த நாடாக மாற்றவும், இந்தியர்களின் நலனுக் காகவும் தேவையான தொழில் நுட் பங்களை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மாக் தொழில் நிறுவனங்களின் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசினார்.
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா, குறிஞ்சி தமிழ் சங்கம் துவக்கவிழா கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மாக் தொழில் நிறுவனங்களின் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசியதாவது:
மாணவர்கள் இந்த தேசத்தின் செல்வங்கள். அப்துல்கலாம் அவர்களை நினைவு கூர்ந்து கனவு காணுங்கள் அதுவும் இன்றே காணுங்கள். சொந்தமண்ணில் பெறப்பட வேண்டிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சாத்தியப்படக் கூடிய தொழில் நுட்பங்கள் எவை யெல்லாம் வெளிநாட்டிலிருந்து பெறுகிறோமோ அவற்றையெல்லாம் நம் நாட்டில் கண்டுபிடிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளேன்.
இதன் பயனாக போயிங், நாசா, லாக்ஹீட் மார்ட்டின் போன்ற பன்னாட்டு நிறு வனங்கள் எனது வாடிக்கை யாளர்களாக இருக்கிறார்கள். இது எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சாத்தியமானது.
புதியதாக சேர்ந்திருக்கும் நீங்கள் இந்தியாவை அதிகாரம் படைத்த நாடாக மாற்றவும், இந்தியர்களின் நலனுக்காகவும் தேவையான தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
கே.பி.ஆர்.குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கி பேசியதாவது: நமது கல்வி நிறுவனத்தில் மாணவர்களை வெறும் பட்டதாரிகளாக மட்டும் ஆக்குவதில்லை; சிறந்த வாழ்க்கைக்கு தகுதியுடையவராக மாற்றுவதே எங்களது குறிக்கோள்.
இக்கல்லூரியில் படித்து வாழ்வில் எந்த துறையில் நிபுணத்துவம் பெற்று சிறந்து விளங்க விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் சுதந்திரமும் இங்கு உள்ளது.
நீங்கள் ஒரு விஞ்ஞானியாக, ஆசிரியராக, சிறந்த பொறியாளராக, தொழில் முனைவோராக, விளையாட்டு வீரராக, எந்த துறையில் வர விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு தேவையான வழி காட்டுதலும் வசதிகளும் இக்கல்லூ ரியில் கிடைக்கிறது.
கே.பி.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாலி பதிப்பகத்தின் நெல்லை ஜெயந்த், நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா, பொள்ளாச்சி தமிழிசைச் சங்க செயலாளர் ஜி. டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக குறிஞ்சி தமிழ்சங்க துவக்க விழாவில் தமிழ் சங்கத்தின் இலச்சினையை ஜி. டி.கோபால கிருஷ்ணன் வெளியிட, கே.பி. ராமசாமி பெற்றுக் கொண்டார்.



