fbpx
Homeபிற செய்திகள்ஆண்டுக்கு 4 கோடி மரக்கன்றுகள் நடவேண்டும்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுரை

ஆண்டுக்கு 4 கோடி மரக்கன்றுகள் நடவேண்டும்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுரை

ஒரு வருடத்திற்கு 3 முதல் 4 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.
தற்போது உள்ள நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரோடு அலைய வேண்டிய நிலை வரும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார்.

கோவை சேம்பர் ஹாலில், மாவட்டத்தில் உள்ள சிறந்த விவ சாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி கிளப்ஆஃப் கோயம்புத்தூர் ஐ.சி.ஆர் கிருஷிவிக்யான் கேந்திரா சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:

உலகம் உயிர் வாழ்வது என்றால் விவசாயத்தால் தான். விவசாயிகள் இல்லை என்றால் எதுவுமே இல்லை. எனவே ஒவ்வொரு விவசாயியை பார்ப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது முதல்வரின் கடுமையான உழைப்பு மற்றும் திட்டங்கள் மூலம் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும் முதல்வராக, விவசாயத்திற்காகவே தனி பட்ஜெட்டை கொண்டு வந்தார். இந்தியாவிலேயே விவ சாயத்திற்கான சிறந்த ஆராய்ச்சி நிலையம் கோவையில் தான் உள்ளது. வேளாண் தொடர்பாக சிறந்த ஆராய்ச்சிகளை இங்கு செய்துள்ளனர்.

சீரழிந்து போன பொருளாதாரத்தை சீர்செய்ய முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தரமான வேளாண் கருவிகள், பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு வருடத்திற்கு 3 கோடியில் இருந்து 4 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களது பிறந்த நாள் அன்று ஒரு மரக்கன்று நட் டாலே பல கோடி மரம் வளரும்.

தற்போது உள்ள நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு திரிய வேண்டிய நிலை வரும். எனவே மரக்கன்றுகள் தற்போது நடவேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்த அரசு பொருளாதார கடனை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக திகழும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் ரோட்டரி இன்டர் நேஷனல் டிஸ்ட்ரிக்ட்-321 மாவட்ட கவர்னர் ராஜசேகர் சீனிவாசன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குமார், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் உதவி நிர்வாக அறங்காவலர் கௌரி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img