கரூர் முதல் கோவை வரையிலான 6 வழி பசுமை வழித் திட்டத்தை கைவிடக்கோரி கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக அரசின் பரிசீலனையில் உள்ள கரூர் முதல் கோவை வரையிலான 6 வழி பசுமை வழி திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த எட்டிமடை, அரிசிபாளையம், கலங்கல், குன்னத்தூர், நரசிம்மநாயக்கன் பாளையம் வழியாக அமைக்க உத்தேசிக்கப்பட்ட கோவை கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்.
இதனைக்கை விடுவதன் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் கோடி மக்களின் பணம் வீணாவதைத் தவிர்க்க முடியும்.
உத்தேசிக்கப்பட்ட இந்த திட் டத்தின் மூலம் பாசன நிலங்களை அழித்தும், லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



