fbpx
Homeபிற செய்திகள்வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு: அக்.28ம் தேதி குலுக்கல்

வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு: அக்.28ம் தேதி குலுக்கல்

கோவையில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் வியாழக்கிழமை (அக்டோபர் 28) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவு பொன்னையாராஜபுரம் சுயநிதித் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணறு சுயநிதித் திட்டம் பகுதி-2 நிலை -3, உடுமலைப்பேட்டை எஸ்.எம்.டி. திட்டம் சிங்காநல்லூர் 168 வீடுகள் திட்டம், சிங்காநல்லூர் 21 வீடுகள் சுயநிதித் திட்டம், பெ.நா.பாளையம் காலிமனைகள் திட் டம் அண்ணாநகர் மனை திட்டம், தோராய விலையில் உப்பிலிபாளையம் 272 வீடுகள் திட்டம், வெள்ளக்கிணறு பகுதி 2ல் நிலை 2 சுயநிதித் திட்டம் ஆகிய திட்டங்களில் காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கு 2021ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அக்டோபர் 28ம் தேதி குலுக்கல் முறையில் வீடு கள், மனைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இந்த குலுக்கல் கோவை, சிவானந்தா காலனியில் உள்ள கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2493359 என்ற தொலைபேசி எண் ணிலும், 94423-23251 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img