fbpx
Homeபிற செய்திகள்நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா நடந்தது. பூரா மொகல்லா தலைவர் ஜாவித் பாஷா தலைமை வகித்தார்.

காங்கிரஸ் நகர தலைவர் முபாரக் வர வேற்றார். பூரா மொகல்லா துணைத் தலைவர் ஹபீப், செயலாளர் அஸ்கர் அலி, பொருளாளர் நூர் முகமது, துணை செயலாளர் முனீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர், நகரத் தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக காங் கிரஸ் எம்.பி., டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டு பேசினார்

. அவர் பேசுகையில், நபிகள் நாயகம் 1400 ஆண்டு களுக்கு முன்பே, நேர்மையாகவும், கண்ணியத்துடனும், சிறப்பாகவும் ஆட்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அவர் வழியில் இன்று ஒருசிலர் தான் நடந்து கொள்கின்றனர். தனக்கு உணவில்லை என்றால்கூட நபிகள் நாயகம், மற்றவர்களுக்கு உணவைக் கொடுத்து அன்பை பெற்றவர். அவர் வழியில் நடந்து, நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.

ஜம்இய்யத் உலமா தலைவர் முஹம் மத் மன்சூர் காஷிபி சிறப்புரை ஆற்றினார். மவு லானா அல்தாப் அஹ்மத் சித்தீகி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img