கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் டீ கடைகள், பேக்கரிகள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு கோவை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மேலும் அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும் வருகின்றனர். நேற்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு செயல்பட்டு வந்த 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தி வருவது கண்டறியப்பட்டது.
அந்த கடைகளில் இருந்து அதிகாரிகள் 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உப யோகப்படுத்தியதற்காக கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.



