fbpx
Homeபிற செய்திகள்எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட் வெளியீடு

எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட் வெளியீடு

இந்தியாவின் சொத்து மேலாண்மை யில் முன்னணி வகித்து வரும் எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனம், 4.35 டிரில்லியன் ரூபாய் அளவிற்கு சொத்து மதிப்புகளை நிர்வகித்து வருகிறது.

தற்போது புதிய, “எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட்” ஐ வெளியிட்டுள்ளது. நிப்டி நெக்ஸ்ட் குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இதுபொருத்தமான நிதியாக இருக்கும். எச்டிஎப்சி ஏஎம்சி நிறுவனம், நிலையான நிதி மேலாண்மையில் 19 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தது.

எச்டி எப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு துறைகளில் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டத்தை கொண்டது.
எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50&இன் டெக்ஸ்பண்ட், ஒரு திறவு நிலை முடிவு கொண்ட திட்டத்தை உடையது.

இப் புதிய நிதி வெளியீடு அக்டோபர் 22, 2021-ல் துவங்கி அக்டோபர் 29, 2021-ல் நிறைவு பெறுகிறது. எச்டிஎப்சி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட் பற்றி, எச்டிஎப்சி ஏஎம்சி முது நிலை நிதி மேலாளர் கிருஷண்குமார் தாகா பேசுகையில், “எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட், துறை ரீதியாகவும், பங்கு அளவிலும் பல்நோக்கு முதலீட்டு திட்டத்தை கொண்டது.

நிப்டி 50 குறியீட்டினை காட்டிலும், ஏற்றத் தாழ்வு விகிதாச்சாரத்தில் சாதகமான அம்சத்தை கொண்டது. கடந்த 2021 செப்டம்பர் 30 நிலவரப்படி, நிப்டி 50 ஐ காட்டிலும், அதிக வளர்ச்சியை நெக்ஸ்ட் நிப்டி 50 கொண்டுள்ளது. இந்த நிதியில் முதலீடு செய்வோர், எதிர்கால நிப்டி 50 நிறுவனங்களின் பயனீட்டு வாய்ப்பை பெறுவர்,” என்றார்.

எச்டிஎப்சி ஏஎம்சி நிர்வாக இயக்கு னர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நவ்நீத் முனாட் பேசுகையில், “இந்த நிதி வெளியீடானது, எங்களது பாசிவ் வகை முதலீட்டு விரிவாக்கத்தால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய நிதி நிர்வகிப்பதில் எச்டிஎப்சி ஏஎம்சி, அனுபவமும், நிரூபிக்கப்பட்ட செயல் திற னையும் பெற்றுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img