fbpx
Homeபிற செய்திகள்நகராட்சி பூங்கா திறப்பு: பொதுமக்கள் வரவேற்பு

நகராட்சி பூங்கா திறப்பு: பொதுமக்கள் வரவேற்பு

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் கவுண்டர் பூங்கா திறக்கப்பட்ட நிலையில், இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தர்மபுரி நகராட்சி பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி பூங்கா செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பூங்கா பூட்டி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தர்மபுரியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை அனுமதிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால், தமி ழகத்தின் பல் வேறு பகுதியிலுள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் கவுண்டர் பூங்கா திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img