விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரத்திற்கான இடம் தேர்வு செய்வதை முன்னிட்டு, சென்னிலைக்குடி கிராமத்தில் உள்ள இடங்களை மாவட்டக் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார், செயற்பொறியாளர் சக்திமுருகன், திருச்சுழி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.



