குழந்தைப் பருவ கல்வியாளர் சுகன்யா வர்தன் (ஆஸ்திரேலியா) மற்றும் பேக் இட் ஆல் நிறுவனர் கீர்த்தனா ஆகியோர் இணைந்து பெற்றோர் விழிப்புணர்வு மாநாடு 2021&ஐ திருப்பூரில் நடத்தினர்.
அதில் பேஸ் பார்டம் முதல் பெற்றோர் வரை பல்வேறு தலைப்புகளில் 24 பேச்சாளர்கள் 3 நாட்கள் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கிடைத்த தொகையில் ஒரு பங்காக ரூ. 50,000த்தை இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளைக்கு அதன் நிறுவனர் கவிதா ஜெனார்த்தனனிடம் சுகன்யா வர்தன், கீர்த்தனா ஆகியோர் வழங்கினர்.



