fbpx
Homeபிற செய்திகள்அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் ஆசிரியருக்கு விருது

அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் ஆசிரியருக்கு விருது

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு,கலாம் கல்வி மையம் அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை சரகம் பாலசுப்ரமணியபுரம் ஆய்க்குடி தொடக்கப்ப பள்ளி ஆசிரியரான முனைவர் ஆ.டேவிட் ஞானராஜுக்கு அப்துல் கலாமின் கனவு ஆசிரியர் 2021 விருது வழங்கப்பட்டது, இதில் ஆரம்ப நிலை மாணவர் முதல் முதுகலை மாணவர்கள் மற்றும் பல்துறை சாதனையாளர்கள் வரையில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை அரங்கேற்றினர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தனசேகரபாண்டியன் (இணை இயக்குநர், சமூகப்பாதுகாப்புத்துறை), ஜெகதீஸ்வரன்(துணை காவல் கண்காணிப்பாளர், மாமல்லபுரம்), ராமசந்திரன் (தலைவர், குழந்தைகள் நல குழு), முனைவர் தேவன்பு ஆகியோர் பங்கேற்றனர்.

விருதைப்பெற்றுக் கொண்ட ஆசிரியர் ஆ. டேவிட் ஞானராஜ் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img