கோவை ஆலாந்துறை அடுத்த விராலியூர் வெள்ளிமலை பட்டணம் வனப் பகுதி அருகே காலை முதல் 5 க்கும் மேற்பட்ட கனரக வாகனத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிகிறது உடனடியாக அப்பகுதியில் வந்த வாகனத்தை மறித்து டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இரண்டு வண்டிகளை சிறைபிடித்தனர்.
பின்னர் ஆலாந்துறை காவல்துறை இருக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு வண்டியில் உள்ள மனநிலை சோதனை செய்து பின்னர் ஓட்டுனரிடம் விசாரித்தனர் அவர்கள் வைத்திருந்த அனுமதி சீட்டு போலி என்பது உறுதிசெய்யப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து இந்த பகுதியில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது என்றும் இரவு நேரங்களில் மற்றும் பகல் நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 இரண்டு வாகனங்களை பொதுமக்களே பிடித்து காவல் துறையிடம் கொடுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



