பல ஆண்டுகளாக தமிழகம் தொற்றும் மற்றும் தொற்றாத வகையில் இரண்டு விதமான நோய்களை அதிக அளவில் சந்தித்து வருகிறது. தொற்றாத நோய்கள் (NCD) அதிகரித்து வருவது மாநிலத்தில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், ஹெல்த்கேர் நிறுவனத் தினர்கள் மருத்துவ சிகிச்சையைத் தாண்டி விரிவான பராமரிப்பு மேலாண்மை வழங்குநர்களுடன் கைகோர்த்து வருகின்றனர்.
தொற்றும் மற்றும் தொற்றாத என இரண்டு வித நோய்களை திறம்பட சமாளிக்கும் விதத்தில், தமிழகத்தின் முன்னணி மருத்துவமனைகளானது உலக சுகாதார முன்னணி நிறுவனமான டேடுடே ஹெல்த் இந்தியா (DTDHI) உடன் கூட்டு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 3 மாதங்களில், DTDHI சிம்ஸ், எம்ஜிஎம், பிஎஸ்ஜி மற்றும் தமிழகத்தில் உள்ள 11 முன்னணி மருத்துவமனைகளுடன் கூட்டணி மேற்கொண்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
இந்த கூட்டாண்மை சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழக சுகாதார முன் முயற்சியான NCD-களைக் கையாள்வதற்கான ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு பெரும் ஆதரவளித்து வருகிறது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, வாய் வழி, கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய், காசநோய், தொழுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய 10-க்கும் மேற்பட்ட பொதுவான சிகிச்சைகளுக்கு சிறப்பு மிக்க சேவையாற்றி வருகிறது.
இந்தக் கூட்டாண்மை குறித்து DTDHI நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம்சர்மா பேசும்போது, “ எங்கள் டிஜிட்டல் சுகாதாரத் திட் டங்கள் தொடர்ச்சியான பராமரிப்பு மாடல்களை உருவாக்க ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.
“தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற் றும் பிந்தைய நோயாளி பராமரிப்பு நிர்வாகத்தில் நாங்கள் சிறப்பான விஷயங்களை மேற்கொள்கிறோம்” என்று DTDHI துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) த்ருமில் சொரத் தியா கூறினார்.



