குணப்படுத்தமுடியாத நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை பரா மரிக்கும் வகையில் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ‘சாந்தம்‘ என்ற ஆதரவு சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில், ‘சாந்தம்‘ எனும் பெயரில் ஆதரவு சிகிச்சை பிரிவு மைய திறப்பு விழா மருத்துவமனை கலையரங் கத்தில் நடைபெற்றது.
நீண்ட நாட்கள் குணப்படுத்த இயலாத புற்றுநோய், நுரையீரல், இருதயம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாதவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஆதரவளிக்கும் வகையில் இந்த மையம் செயல்பட உள்ளது.
இந்த மையத்தில் 40 படுக்கைகள் உள்ளன.
மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை சாந்தி ஆசிரமம் தலைவர் கெஜி வினோ ஆரம், திருவனந்தபுரம் பேலீயம் இந்தியா திட்ட இயக்குனர் ஸ்மிருதி இரானி ஆகியோர் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், “ கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்ட பி.எஸ்.ஜி அறக்கட்டளை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது.
பி.எஸ்.ஜி மாணவர் இல்லம், விஷ்ணு காந்தி கல்வி மையங்கள் மூலம் பலதரப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சந்தம் ஆதரவு மையம் துவங்கப்பட்டுள்ளது.
தேவை உள்ளவர்களை அறிந்து பராமரிப்பு செய்யும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ் வரன் மருத்துவமனையின் கேன்சர் பிரிவு இயக்குனர் பாலாஜி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



