fbpx
Homeபிற செய்திகள்30% போனஸ் வழங்க மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் வலியுறுத்தல்

30% போனஸ் வழங்க மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க கோவை மண்டல விரிவடைந்த செயற்குழு கூட்டம் அதன் மண்டல செயலாளர் இரா.கண்ணன் தலைமையில் நடந்தது.

மாநில இளைஞர் அணி செயலாளர் பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். விழாவில் மாநில தலைவர் சி.கண்ணன் பொதுச்செயலாளர் மு.சுப்பிரமணியன், மாநில அமைப்பு செயலாளர் க.வீராச்சாமி, மாநில துணை பொதுச் செய லாளர்கள் ஆ.அரங்கநாதன், வே.ஜெயக்குமார், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஊதியஉயர்வு மற்றும் வேலை பளு ஒப்பந்தத்தை உடன் ஏற்படுத்த வேண்டும். தீபாவளி போனஸ் 30% வழங்கிட வேண்டும். நேரடி பணி நியமனம் மூலம் அனைத்து களபணி கணக்கீடு பணி மற்றும் அலுவலக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என் பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, உடு மலை, பல்லடம் கோவை மாநகர், வடக்கு தெற்கு ஆகிய இடங்களில் இருந்து நிர்வாகிகள் ஈஸ்வரன், கிருஷ்ணன், சீனி வாசன், பாபு, செந்தில் குமார் ரமேஷ், அனந்த சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோவை வடக்கு மாவட்ட இணைச் செய லாளர் மணிவேல் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img